Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உணவு பார்சல்-அதிகாரிகள் அதிரடி உத்தரவு

ஜுலை 23, 2021 04:10

திருப்பூர்: திருப்பூரில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்போது விதிகளை மீறும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:

உணவு பரிமாறும் போதும், பார்சல் தயாரிக்கும் போதும் ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் காகிதங்களை பயன்படுத்தக்கூடாது. சூடான உணவு பண்டங்களை செய்தித்தாள்களில் வைத்து பரிமாறக்கூடாது. உணவு பார்சல் தயாரிக்கும் போதும் அவற்றை பயன்படுத்தக்கூடாது. பாலிதீன் காகிதத்துக்கு வாழை இலையை மட்டும் பயன்படுத்த வேண்டும். 

இனிப்பு மற்றும் கார வகைகள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருந்தால் தயாரிப்பு தேதியை மக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும். ஓட்டல் ஊழியர்கள் கண்டிப்பாக முக கவசம், தலை கவசம், கையுறை அணிந்து பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது .

ஆய்வின் போது உணவு பாதுகாப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்றாத 8 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் மற்றும் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தரமற்ற உணவு தயாரிப்பு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.உணவு பார்சல் செய்யும் போது காகிதங்களை உமிழ்நீர் தொட்டு எடுக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். 

விதிமுறைகளை மீறினால் உணவு பாதுகாப்பு சட்டவிதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும் ஓட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு, பார்சல் வழங்குவது தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என உணவு பாதுகாப்பு துறையினர் அறிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்