Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலவச சிம்கார்டு மாணவர்கள் பட்டியல் தயாரிப்பு

ஜுலை 23, 2021 04:19

திருப்பூர்: தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணைய வழி பாடம் கற்க ஏதுவாக கடந்த முறை 2 ஜி.பி., சிம்கார்டு வழங்கப்பட்டன. இதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் 2020-21 கல்வி ஆண்டுக்கான இளநிலை 3-ம் ஆண்டு, முதுநிலை 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களும் பட்ட மேற்படிப்பை முடித்து விட்டனர். எனவே புதிய கல்வியாண்டின் இளநிலை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு பயில உள்ள மாணவர்களுக்கும் இணையவழி பாடம் நடத்தப்பட உள்ளதால் சிம்கார்டு தேவை அவசியமாகியுள்ளது.

இதன்கீழ் 2021-22 கல்வியாண்டில் உள்ள இளநிலை 2, 3ம் ஆண்டு ,முதுநிலை 2ம் ஆண்டு, எம்.பில்., முதலாமாண்டு இளநிலை, முதுநிலை பயில உள்ள அரசு, அரசு உதவிபெறும் மாணவர்கள் எண்ணிக்கை தொகுக்கப்பட்டு வருகின்றன.
 

தலைப்புச்செய்திகள்