Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டியானை: 2-ம் நாளாக தாய் யானை பாசப்போராட்டம்

ஜுலை 26, 2021 10:16

கூடலூர் அருகே சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானையை வனத்துறையினர் நெருங்கவிடாமல், 2-வது நாளாக தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர்அருகேயுள்ள செம்பாலை பகுதியில் ஒரு பள்ளத்தாக்கில் குட்டி யானை ஒன்று, 2 தினங்களுக்கு முன்பு இறந்து கிடந்தது.

தகவல் அறிந்து வனச்சரகர்கணேசன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்றபோது, இறந்த குட்டியின் அருகே தாய் யானையும், மற்றொரு யானையும் நின்றிருந்தன. பட்டாசு வெடித்தும் சப்தம் எழுப்பியும் யானைகளை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால், குட்டி யானைக்கு அருகில் வனத்துறையினர் செல்லாதவாறு 2 காட்டு யானைகளும் தடுத்தன. நீண்ட நேரம் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

வனத்துறையினர் நேற்றும் குட்டி யானையை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய முயன்றனர். ஆனால் தாய் யானை அந்த இடத்திலிருந்து நகராமல் பாசப்போராட்டம் நடத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வனத்துறையினர் கூறும்போது, ‘‘குட்டியுடன் இந்த பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்துக்கு உணவு தேடி யானைகள் வந்துள்ளன. திரும்பிச்செல்லும்போது குட்டி யானை சேற்றில் சிக்கி இறந்திருக்கலாம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’’ என்றனர்.
 

தலைப்புச்செய்திகள்