Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் புதிதாக 39 ஆயிரம் பேருக்கு கொரோனா

ஜுலை 26, 2021 02:22

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 97.35 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,361 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 35,968 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 05 லட்சத்து 79 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 4.11 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 416 பேர் பலியானதை அடுத்து, இதுவரை 4,20,967 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.35 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.31 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் இன்று (ஜூலை 26) காலை 8 மணி நிலவரப்படி 43.51 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 20,45,137 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்று (ஜூலை 26-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனா தொற்றால் 19 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 லட்சத்து 75 ஆயிரத்து 129 பேர் பலியாகினர். 17 கோடியே 67 லட்சத்து 79 ஆயிரத்து 229 பேர் மீண்டனர்.

தலைப்புச்செய்திகள்