Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியா பெருமை கொள்கிறது - பவானி தேவிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

ஜுலை 27, 2021 09:37

புதுடெல்லி: ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி கலந்து கொண்டார். முதல் சுற்றில் வென்ற பவானி தேவி இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார். வாள்வீச்சில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் அவர் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார்.

தனது தோல்வி குறித்து நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரி தனது டுவிட்டர் பக்கத்தில் பவானி தேவி பதிவிட்டார். இந்நிலையில், தமிழக வீராங்கனை பவானி தேவியை பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் பாராட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நீங்கள் சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தீர்கள். அதுதான் முக்கியம். வெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஓர் அங்கம். உங்கள் பங்களிப்பைக் கண்டு இந்த தேசம் பெருமை கொள்கிறது. இந்திய மக்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உங்களது முயற்சியைக் கண்டு இந்தியா பெருமை கொள்கிறது. வெற்றிக்கான பயணத்தில் இது மற்றுமொரு படி என பதிவிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்