Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போதை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை-வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை

ஜுலை 27, 2021 04:13

திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடை, பெட்டி கடை, பேக்கரிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக கடைகளில் தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை 31 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக சிறு, குறு வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த் தலைமையில் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் துணை கமிஷனர் பேசுகையில்:

‘குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை எக்காரணம் கொண்டு விற்க கூடாது. இதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விற்பவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டும். ஒருவேளை போலீசார் சோதனையின் போது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

தலைப்புச்செய்திகள்