Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3-ந் தேதி ஊட்டி வருகை

ஜுலை 28, 2021 10:00

ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வருகிற 4-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வருகிற 3-ந் தேதி ஊட்டிக்கு வருகிறார். பின்னர் அவர் ராஜ்பவனில் தங்குகிறார். தொடர்ந்து 5-ந் தேதி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்