Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்த வாலிபர் கைது

ஜுலை 28, 2021 03:39

திருப்பூர்: திருப்பூரில் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவு படி கடந்த சில நாட்களாக போலீசார் கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா? என தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் அதிரடியாக கைது செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நல்லூர் போலீசார் முதலிபாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவர் கோவை உக்கடம்பகுதியை சேர்ந்த ரியாஸ்தீன் (வயது 34) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை நல்லூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்ததும் தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்த போலீசார் விற்பனைக்காக கொண்டு வந்த 103 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்