Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலைகளில் உலா வரும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்

ஜுலை 28, 2021 03:41

திருப்பூர்: திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் உள்ளன. பெரிய அளவில் வளர்ந்த மரங்களும் ஏராளமாக உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு குரங்கு  மரங்களின் கிளைகளில் தாவி சுற்றி வருகிறது. அப்பகுதியினர் அளிக்கும் உணவு, பழங்கள் ஆகியவற்றை உண்கிறது.

சாலையை அடிக்கடி  கடந்து அடுத்த வீதிக்கு செல்கிறது.பெரும்பாலும் அங்குள்ள மரங்களின் கிளை மீது அமர்ந்து கொண்டிருக்கிறது. இதே போல் மங்கலம், பெரியபுத்தூர் பகுதியில் இரு குரங்குகள் உலா வந்த வண்ணம் உள்ளது. மரங்களின் மீது தாவி விளையாடுவதும், கிடைக்கும் காய்கனிகளையும், வீடுகள், கடைகளில் தரும் உணவு பொருட்களையும் அவை உட்கொண்டு சில நாட்களாக அப்பகுதியில் சுற்றி வருகிறது. இது பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

எனவே  அசம்பாவிதம் ஏற்படும் முன் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்