Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பு நடவடிக்கை-கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஜுலை 28, 2021 03:45

தாராபுரம்: திருப்பூர் மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பு நடவடிக்கை அலுவலராக உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் நியமிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

தாராபுரம் நகர் பகுதி, கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்து பகுதி, தனியார் நூற்பாலை வணிக வளாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தார். தெர்மல் ஸ்கேனர் வைக்கப்பட்டுள்ளதா? கிருமிநாசினி உள்ளதா? மாஸ்க் அணிந்து உள்ளே செல்கிறார்களா? இப்பணியை கவனிப்பதற்கு என தனி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா? என ஆய்வு செய்தார். 

மேலும் ஓட்டல், பேக்கரிகளில் அரசு அறிவித்தபடி 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். வணிக வளாகத்திற்குள் மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. 

ஆய்வின்போது தாராபுரம் நகராட்சி கமிஷனர் சங்கர், டாக்டர் லட்சுமி நாராயணன், பி.டி.ஒ.க்கள் பாலசுப்பிரமணியம், ஜீவானந்தம், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அருண் பிரபாகர், சங்கர், தர்மராஜ், செல்வகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்