Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு; பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஜூலை 31-ம் தேதி பாராட்டு விழா: இணைய வழியில் நடக்கும் என அறிவிப்பு

ஜுலை 29, 2021 11:21

பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்தபிப்ரவரி 26-ம் தேதி நிறைவேற்றப்பட்ட சிறப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதற்கு காரணமான ராமதாஸுக்கு பாமக,வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்துஅமைப்புகளின் சார்பில் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இட ஒதுக்கீட்டுக்கான எல்லா புகழும் ராமதாஸையே சாரும். அவருக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் விரும்புகின்றனர்.

ஆனாலும், கரோனா ஊரடங்குசூழலில் அத்தகைய விழா தவிர்க்கப்பட வேண்டும் என்பதால்பாமக, வன்னியர் சங்கம், சமூகமுன்னேற்ற சங்கம் ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து ராமதாஸுக்கு இணையவழியில் பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளன. வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்குஇந்த பாராட்டு விழா நடக்கும்.விழாவின் நிறைவாக ராமதாஸ்ஏற்புரையாற்றுகிறார். இதில்ஆயிரக்கணக்கானோர் இணைய வழியில் பங்கேற்பர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்