Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூர் கோவில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு

ஜுலை 29, 2021 04:33

உடுமலை: தென்மண்டல கோவில்களை ஆவணப்படுத்தும் திட்டத்தில் பழமையான கோவில்களை ஆய்வு செய்யும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி முதன்மை தொல்லியல் கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி, தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா, இந்துசமய அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் பவானி, திருப்பூர் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் பழமையான சிறப்பு வாய்ந்த தென்மண்டல கோவில்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடத்தூர், கணியூர், குமரலிங்கம், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பழமை யான கோவில்களை ஆய்வு செய்தனர்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படும் குமரலிங்கம் கரிவரதராஜ பெருமாள் கோவில் பராமரிப்பில்லாத நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக பூட்டப்பட்டிருக்கும் இந்த கோவிலை பராமரிக்கவும் பாதுகாக்கவும் பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் குமரலிங்கம் கரிவரதராஜ பெருமாள் கோவிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மண்ணின் மேற்பரப்பிலும் மண்ணுக்கு உள்ளேயும் இருக்க கூடிய கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களை  ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்