Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2 நாட்களாக கிணற்றில் தவித்த நாய் மீட்பு

ஜுலை 29, 2021 04:38

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா  செங்கப்பள்ளி குன்னத்தூர் சாலையில் அமைந்துள்ளது ஊமைச்சி வலசு கிராமம். இந்த கிராமப்பகுதியில் அமைந்துள்ள கோவில் அருகில் பழமை வாய்ந்த சுமார் 100 அடி கிணறு ஒன்று உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிணற்றில் நாய் ஒன்று தவறி விழுந்தது. அந்த நாய் தொடர்ந்து குரைத்தவாறு இருந்தது.

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி நாயை உயிருடன்  மீட்டனர். நாயை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
 

தலைப்புச்செய்திகள்