Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு: மத்திய அரசின் முடிவுக்கு அமித்ஷா வரவேற்பு

ஜுலை 30, 2021 09:45

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டு முதலே அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு 10 சதவீதமும் இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியிருப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களின் நலன்கள் மீதான மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டியிருந்தார்.
 

தலைப்புச்செய்திகள்