Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவேக்சின் இறக்குமதி அங்கீகாரம் ரத்து- பிரேசில் நடவடிக்கை

ஜுலை 30, 2021 09:55

ஐதராபாத்: இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி வினியோகித்து வருகிறது. இந்த தடுப்பூசியின் 40 லட்சம் ‘டோஸ்’ இறக்குமதிக்கான அங்கீகாரத்தை பிரேசில் ரத்து செய்துள்ளது.

இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனை அங்கீகாரத்தை ரத்து செய்ததுடன், பாரத் பயோடெக் நிறுவனத்தின் அவசர கால பயன்பாட்டு அங்கீகார விண்ணப்பத்தையும் பிரேசில் ரத்து செய்த நிலையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கான முடிவை பிரேசில் நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பான அன்விசா எடுத்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்