Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டோக்கியோ ஒலிம்பிக்: கொலம்பிய வீராங்கனையிடம் போராடி வீழ்ந்த மேரி கோம்

ஜுலை 30, 2021 11:15

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தோல்வியைத் தழுவினார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டிகள் இன்று நடந்தன. இதில் 51 கிலோவுக்கான எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோமும், கொலம்பிய வீராங்கனை இன்கிரிட் வெலன்சியாவும் மோதினர்.

இதில் 2 -3 என்ற கணக்கில் இந்தியாவின் மேரி கோம் போராடித் தோற்றார். இந்தத் தோல்வியின் மூலம் மகளிர் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பறிபோனது. மேரி கோமை வென்ற வெலன்சியா 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.

2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மேரி கோம் வெண்கலம் வென்றவர். மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான மேரி கோமின் இத்தோல்வி ரசிகர்களிடத்தில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்