Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்களவை தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் செய்யும் கிரேட் காளி

ஏப்ரல் 26, 2019 11:32

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் wwe எனப்படும் மல்யுத்த போட்டியில் பிரபலமான இந்திய வீரர் 'கிரேட் காளி' (தாலிப் சிங் ரானா) பாஜக வுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பகுதியில் அத்தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்த அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தலைப்புச்செய்திகள்