Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலங்கை வீரர்கள் 3 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஓர் ஆண்டு தடை: தலா ரூ.37 லட்சம் அபராதம் 

ஜுலை 31, 2021 11:24

இலங்கை அணி வீரர்கள் குஷால் மெண்டிஸ், தன்சுகா குணதிலகா, நிரோஷன் டிக்வெலா ஆகியோர் துர்ஹாமில் கடந்த மாதம் பயோ-பபுள் சூழலை மீறியதையடுத்து, ஓர் ஆண்டு அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் பங்கேற்கத் தடை விதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த 3 வீரர்களுக்கும் தலா ரூ.37 லட்சம் அபராதமும், உள்நாட்டுப் போட்டிகளில் 6 மாதங்கள் விளையாடவும் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது ஹோட்டலில் பயோ-பபுள் சூழலில் தங்கியிருந்த இலங்கை வீரர்களில் குஷால் மெண்டிஸ், தன்சுகா குணதிலகா, நிரோஷன் டிக்வெலா ஆகிய மூவரும் பயோ-பபுள் சூழலை மீறி ஹோட்டலை விட்டு ஜூன்27ம் ேததி வெளியேறினர். இந்த விவகாரம் இலங்கை அணியின் மருத்துவக் குழுவினருக்கும் தெரியவி்ல்லை. இந்த 3வீரர்களும் துர்ஹாம் சிட்டி சென்டரில் சுற்றித்திரிந்தது வீடியோவில் பதிவானது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து தொடரிலிருந்து பாதியிலேயே இந்த 3 வீரர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பபட்டனர்.

இலங்கை வீரர்கள் 3 பேர் பயோ-பபுளை மீறிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் விசாரணை ஆணையம் அமைத்தது. அந்த ஆணையம் வியாழக்கிழமை அளித்த அறிக்கையில், “ மெண்டிஸ், குணதிலகாவுக்கு தலா 2 ஆண்டு தடையும், டிக்வெலாவுக்கு 18 மாதங்கள் தடையும்” விதித்து பரிந்துரை செய்யப்பட்டது

இதற்கிைடயே இலங்கை வாரியம் 2 ஆண்டுகள் தடையை 3 வீரர்களுக்கும் ஓர் ஆண்டு சர்வதேச தடையாகவும், 6 மாதங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடத் தடையாகவும் மாற்றி அறிவித்தது. மேலும், இந்த 3 வீரர்களும் இலங்கை அணியின் மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. . இதில் குணதிலகா ஏற்கெனவே இரு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், மெண்டிஸ் ஒருமுறை கார் ஓட்டும்போது விபத்து ஏற்படுத்தி, ஒருவர் உயிரிழக்க காரணமாகியுள்ளார்.

இந்தத் தடையால் இந்த 3 வீரர்களும் ஐக்கியஅரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க முடியாது.ஆனால், 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைக்குப் போட்டிக்கு முன்பாக அணிக்குத் திரும்புவார்கள்

குணதிலகா தனது 31 வயதிலும், டிக்வெலா தனது 29 வயதிலும், மெண்டிஸ் தனது 27வயதிலும் அணியில் இணைவார்கள்.

தலைப்புச்செய்திகள்