Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏப்ரல் 30-ம் தேதி வடதமிழகம் அருகே புயல் வரும் சென்னை வானிலை ஆய்வு மையம்

ஏப்ரல் 26, 2019 01:02

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்துக்கு மிக கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது.  

ஏப்ரல் 30-ம் தேதி வடதமிழகம் அருகே புயல் வரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மணடலமாக மாறியுள்ளது. அடுத்த 24 மணி நேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி புயலாகும்.

ஏப்ரல் 30-ம் தேதி வடதமிழகம் அருகே புயல் வரும். ஏப்.30-ம் தேதி வடதமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயலின் நகர்வைப் பொறுத்தே காற்றோ, மழையோ இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்