Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மானியத்துடன் சிறு பால் பண்ணை-அரசிடம் கோரிக்கை

ஜுலை 31, 2021 03:11

உடுமலை: பால் பண்ணைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் கால்நடைத்துறையால் மானியத்தில் பால் பண்ணை விரிவாக்கத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாவட்டம் தோறும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பால் பண்ணை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கப்படுகிறது.

அவ்வகையில் உடுமலை சுற்றுப்பகுதியை சேர்ந்த பலர் சுய தொழில் மேற்கொள்ள முனைப்பு காட்டுகின்றனர். அதில் விவசாயம், கால்நடை வளர்த்தலை பிரதானமாக கொண்டுள்ளனர். எனவே மானியத்துடன் சிறு பால் பண்ணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பால் பண்ணை அமைக்க 300 சதுர அடி நிலம், புல் வகை மற்றும் பயறு வகை தீவனப்பயிர்கள் சாகுபடி செய்ய ஏதுவாக ஒரு ஏக்கர் அளவில் நிலம் இருத்தல் உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. குறிப்பாக கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். 

உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள் பலர் புதிதாக கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்தினால் பலர் பயனடைவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

தலைப்புச்செய்திகள்