Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

70 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளன-இயற்கை கழக தலைவர் தகவல்

ஜுலை 31, 2021 03:18

திருப்பூர்: திருப்பூர் குமரன் கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில்  சர்வதேச புலிகள் தினம்  அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் பங்கேற்று பேசியதாவது:-

கடந்த 1800ம் ஆண்டுகளில்  ஒரு லட்சத்துக்கும் அதிகமான புலிகள் இந்தியாவில் இருந்துள்ளன. ஆனால் வேட்டையாடுதல் மூலம் அழிந்துவிட்டன. கடந்த 1900ம் ஆண்டு கணக்கெடுப்பில் 40 ஆயிரம் புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த 1973ம் ஆண்டு 1,200 புலிகள் மட்டுமே இருந்துள்ளதால் புலிகளை காப்பாற்ற காப்பகங்கள் அமைக்கப்பட்டன. இந்தியாவில்  51 புலிகள் காப்பகங்கள் உள்ளன. கடந்த இரண்டு மாதத்திற்கு முன் மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. காப்பகம் உருவான பிறகு  புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

2018 கணக்கெடுப்பில் 2,489 புலிகள் இருந்தது கண்டறியப்பட்டது. உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளன.இயற்கை சுற்றுச்சூழல் சமன்பாட்டில் புலிகள் மிக உயர்ந்த இடத்தில் உள்ளன. புலிகள் வசிக்கும் காடு வளமான காடு என அறியப்படுகிறது. புலிகள் தனிமையான சூழலில் வசிக்கும். பெண் புலிகள் இரண்டு முதல் 7 குட்டிகள் வரை ஈனுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்