Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ.க.வில் இணைந்தார் மணிப்பூர் முன்னாள் காங்கிரஸ் தலைவர்

ஆகஸ்டு 01, 2021 04:05

மணிப்பூரில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்களை இழுக்கும் பணியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.

மணிப்பூரில் முதல் மந்திரி பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரின் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கோவிந்தாஸ் கொந்தவுஜம் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளார்.  அவர் முதல் மந்திரி பைரன் சிங் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்ட கோவிந்தாஸ், தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். பின்னர் அவர் ‘‘பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்கள் மீது கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய மந்திரி சபையில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மோடி அரசை வலிமையாக்க மணிப்பூர் உறுதியளிக்கும்’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்