Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆண்கள் ஹாக்கி - இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்

ஆகஸ்டு 03, 2021 10:52

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோதின. ஹர்மன்பிரீத் சிங் 7வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 8வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் கால் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது கால் பாதியில் பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்தது. இதனால் 2-2 என சமனிலை வகித்தது. மூன்றாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. நான்காவது கால் பாதியில் பெல்ஜியம் அணி 3 கோல்கள் அடித்தது. இறுதியில், பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தலைப்புச்செய்திகள்