Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து மயங்க் அகர்வால் விலகல்

ஆகஸ்டு 03, 2021 10:53

லண்டன்: இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.  இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்திலிருந்து தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் விலகியுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பந்து அவரது ஹெல்மெட்டை தாக்கிய காரணத்தினால் முதல் போட்டியிலிருந்து விலகி உள்ளார்.  

ஏற்கனவே தொடக்க வீரர் கில் இங்கிலாந்து தொடரிலிருந்து காயம் காரணமாக விலகி உள்ளார். தற்போது மயங்க் அகர்வாலுக்கு ஏற்பட்டுள்ள காயம் அணியில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்