Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

12 மணி நேரத்தில் பானி புயல் உருவாகிறது: மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு

ஏப்ரல் 27, 2019 08:49

புதுடெல்லி: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் அடுத்த நகர்வைப் பொருத்து, எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் துல்லியமாக தெரிவிக்கும்.

இந்நிலையில், இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இன்றும் 12 மணி நேரத்தில் பானி புயலாக மாறும் என தெரிவித்துள்ளது.

“சென்னைக்கு தென்கிழக்கில் 1210 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இது மணிக்கு 20 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் பானி புயலாக வலுப்பெறும். இந்த புயல் வரும் 30-ம் தேதி மாலை வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரையை நெருங்கும். புயல் கரையை நெருங்கும்போது, மணிக்கு 120 முதல் 145 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது” என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

தலைப்புச்செய்திகள்