Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

ஆகஸ்டு 04, 2021 01:10

புதுடெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் மற்றும் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதால் கடந்த 2 வாரங்களாக அவை அலுவல்கள் முடங்கியுள்ளன.

இந்நிலையில் நேற்று மாநிலங்களவையின் முதல் ஒத்திவைப்புக்கு பிறகு அவையின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார். அப்போது அவை முடக்கம் குறித்து அவருடன் விவாதித்தார். முன்னதாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல் ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை வெங்கய்ய நாயுடு பேசினார்.

அப்போது அரசும் எதிர்க்கட்சிகளும் கூட்டாக அமர்ந்து பேசி, நாடாளுமன்ற முடக்கத்துக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என இரு தரப்பிலும் அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.-

தலைப்புச்செய்திகள்