Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 95 கன அடியாக சரிவு

ஆகஸ்டு 06, 2021 10:44

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 3 ஆயிரத்து 403 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2 ஆயிரத்து 95 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 500 கன அடியும் என மொத்தம் 14 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 79 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 78.40 அடியானது.

தலைப்புச்செய்திகள்