Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குழந்தை பிறந்த மறுநாளே பெண் போலீஸ் ஏட்டு கொரோனாவுக்கு பலி

ஆகஸ்டு 06, 2021 10:49

சென்னை: சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் வசந்தா (வயது 47). சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் மோசடி தடுப்பு பிரிவு தலைமை போலீசாக பணியாற்றி வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் கருவுற்றார். இதையடுத்து பிரசவத்துக்காக வசந்தா அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 28-ந்தேதி எழும்பூர் அரசு மகப்பேறு நல ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவருக்கு நேற்று முன்தினம் அழகான பெண் குழந்தை பிறந்தது. மேலும், அவரது உடல் நிலை மோசமடைந்ததால் டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை வசந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருவாரூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு போலீசார் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். குழந்தை பிறந்த மறுநாளில் பெண் போலீஸ் கொரோனா தொற்றினால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்