Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜிஎஸ்எல்வி - எப்10 ராக்கெட் மூலம் இஓஎஸ் செயற்கைக் கோள் ஆக.12-ல் விண்ணில் பாய்கிறது

ஆகஸ்டு 06, 2021 12:23

புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-03 செயற்கைக் கோள், ஜிஎஸ்எல்வி - எப்10 ராக்கெட் மூலம் வரும் 12-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. நம் நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்து கிறது.

இதற்கிடையே, புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புபணிகளுக்காக இஓஎஸ்-03 (ஜிஐசாட்) என்ற அதிநவீன ‘ஜியோஇமேஜிங்’ செயற்கைக் கோளைஇஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி - எப்10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் ராக்கெட் ஏவும் திட்டம் 2 முறை தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், கரோனா பரவலால் ராக்கெட் ஏவும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், தொற்று குறைந்ததைத் தொடர்ந்து, திட்டப் பணிகளை இஸ்ரோ மீண்டும் முடுக்கிவிட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி - எப்10 ராக்கெட் மூலம் இஓஎஸ்-03 செயற்கைக் கோள் ஆகஸ்ட் 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இஓஎஸ் செயற்கைக் கோள் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள். இதில் உள்ள 5 விதமான 3டி கேமராக்கள், தொலைநோக்கி மூலம்புவிப்பரப்பை துல்லியமாக படம்எடுக்க முடியும். இதன்மூலம் வானிலை நிலவரங்களைக் கண்காணித்து, புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள முடியும்.
 

தலைப்புச்செய்திகள்