Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் 3-ம் நாளாக இன்றும் டெல்லியில் முகாம்

ஆகஸ்டு 07, 2021 04:27

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலை வர் செல்வம், மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகி யோர் இரு தினங்களுக்கு முன்டெல்லி சென்றிருந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பல அமைச்சர்களை சந்தித்தனர். இந்நிலையில் மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவை சந்தித்து,ரூ. 320 கோடியில் புதிய சட்டப் பேரவைக் கட்டுமானப்பணிக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விஷ யங் களுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, சமக்ர சிக் ஷா அபியான் நிதிமுறை (முழுமையான கல்வி திட்டம்), உயர்கல்வி மேம்பாட்டுக்கான மத்திய அரசின் ரூசா திட்டத்தில் மத்திய அரசின் 60சத நிதி ஒதுக்கீடு, பள்ளி, கல்லூரி கட்டுமான பணிகள், கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் அமைதல் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பேசினர்.

ஆனால், உள்துறை அமைச்சர்நமச்சிவாயம் மற்றும் கட்சி நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட் டுள்ளனர். இதுதொடர்பாக கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுவை மாநிலங்களவை எம்பியாக அதிமுகவைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் உள்ளார். இவரின் பதவிக்காலம் வரும் அக்டோபருடன் முடிவடைகிறது. புதிதாக மாநிலங்களவை எம்பி தேர்வு செய்யப்பட வேண்டும். புதுவை சட்டப்பேரவையில் உள்ளஎம்எல்ஏக்கள் எண்ணிக்கை படிஎன்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணிஎம்எல்ஏக்கள் நிறுத்தும் வேட்பா ளரே மாநிலங்களவை எம்பியாக முடியும்.

எம்பி பதவியை பெற என்ஆர்.காங்கிரஸ், பாஜக இரு தரப்பும் முயற்சித்து வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து கட்சி மாறிய அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் என்ஆர்.காங்கிரஸ் சார்பில் எம்பி பதவியை பெற தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அதேநேரத்தில் பாஜகவும் எம்பி பதவியை பெற தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மாநிலங்களவையில் எண்ணிக்கையை உயர்த்த பாஜக விரும்புகிறது.

இதுதொடர்பாக பாஜகஅமைப்பு செயலர் சந்தோஷ்ஜி யுடன் பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் கட்சி சூழல், புதுச்சேரியில் கட்சி வளர்ச்சி தொடர்பாக பாஜக தேசியத்தலைவர் நட்டா மற்றும் முக்கியத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அடுத்தக் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால் அதைக் கருத்தில் கொண்டு பாஜக செயல்பாடு இருக்கும்" என்று குறிப்பிட்டனர்.

இந்த டெல்லி பயணத்தில் பல கட்சி நிர்வாகிகள் இடம் பெற்றிருந்தாலும் மாநிலத்தலைவர் சாமிநாதன் பங்கேற்க வில்லை.

தலைப்புச்செய்திகள்