Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் வெடிபொருள் வீசிய பாகிஸ்தான் ஆளில்லா விமானம்

ஆகஸ்டு 07, 2021 05:17

கடந்த ஜூன் 27-ம் தேதி காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் 2 வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 2 வீரர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் பின்ன ணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஜூலை 23-ம் தேதி காஷ்மீரின் ஜம்மு பகுதி கனாசக் எல்லையில் பறந்த ஆளில்லா உளவு விமானத்தை போலீஸார் சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்து 5 கிலோ வெடிபொருட்கள் கைப் பற்றப்பட்டன.

இந்த சூழலில் காஷ்மீரின் சம்பா எல்லைப் பகுதியில் நேற்று அதிகாலை ஆளில்லா விமானம் பறப்பதை இந்திய ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர். அதனை சுட்டு வீழ்த்துவதற்குள் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் மறைந்துவிட்டது. ஆளில்லா விமானம் பறந்த எல்லைப் பகுதி முழுவதும் வீரர்கள் சோதனை நடத்தி 2 கைத்துப்பாக்கிகள், ஏராளமான துப்பாக்கி குண்டுகளை கண்டெடுத்தனர்.

இதுகுறித்து சம்பா எஸ்எஸ்பி ராஜேஷ் சர்மா கூறியதாவது:

இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்திய சிறப்பு வீரர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை யில் சம்பா எல்லையில் ஆளில்லா விமானம் பறப்பதை கண்டு பிடித்தனர். ராணுவ வீரர்களும் போலீஸாரும் இணைந்து அந்த பகுதியில் சோதனை நடத்தினோம்.

அப்போது இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் 2 கைத்துப்பாக்கிகள், குண்டுகளை வைக்கும் 5 கையடக்க பெட்டிகள், 122 துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றினோம். பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எந்த தீவிரவாதிகளுக்காக ஆயுதங்கள் வீசப்பட்டன. எல்லையோர கிராமங்களில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்