Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்

ஆகஸ்டு 07, 2021 05:49

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து 28 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் சோமு நகரம் உதைப்புரியா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ராகேஷ் குமார் நகார். இவர் போட்டி தேர்வுக்காக அவரது வீட்டில் இருந்து தயாராகிக் கொண்டு இருந்துள்ளார்.

செல்போன் பயன்படுத்தும்போது ப்ளூடூத் ஹெட்போனை பயன்படுத்தி பேசுவது வழக்கமாக கொண்டு இருந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது ப்ளூடூத்தில் மின்சாரம் பாய்ந்து வெடித்தது. இதில் ராகேஷ் குமாரின் காதுப்பகுதியில் பலத்த காயம் அடைந்ததுடன், மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்த்துள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘அவர் சிகிச்சையின்போது மரணம் அடைந்தார். சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம்’’ எனத் தெரிவித்துள்ளது.

போலீஸ் தரப்பில் ராகேஷுக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் செல்போன் ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
 

தலைப்புச்செய்திகள்