Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழவைத்த சம்பவம் - கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை

ஆகஸ்டு 08, 2021 10:52

கோவை:  கோவை மாவட்டம் அன்னூர் ஒற்றர்பாளையம் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வைத்து கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.

விசாரணையில் முத்துசாமியை, கோபால்சாமி தன் காலில் விழச் சொன்னது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்