Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆகஸ்டு 09, 2021 10:40

புதுடெல்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், தேசியக்கொடி மீது மக்கள் அன்பும், மரியாதையும் வைத்து உள்ளனர்.சுதந்திரம் மற்றும் குடியரசு தின நாட்களில் தேசியக்கொடியை தங்கள் சட்டையில் அணிந்து செல்வது, மக்களின் வழக்கமாக உள்ளது.

தேசியக் கொடிக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் ஆனால் பிளாஸ்டிக் கொடிகளில் அது சாத்தியமாவது இல்லை. பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கு காலதாமதமாகும்; நீர் வளத்தையும் பாதிக்கும். அதனால் பிளாஸ்டிக்கால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்படுவதை தடுக்க வேண்டும். காகிதங்களால் தேசியக்கொடிகளை தயாரிக்க உத்தரவிட வேண்டும். 

சுதந்திர தினம் தவிர அரசு விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்