Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.5.24 லட்சம் கோடி

ஆகஸ்டு 09, 2021 04:19

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசு அதிகளவில் கடன்களை வாங்கி உள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அரசின் வருமானம் மிகவும் சரிந்து விட்டதால் எல்லா நிலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழக அரசின் வருமானம் உபரியாக இருந்தது. 2011-16-ல் வருமானம் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த பற்றாக்குறை 2016- 21-ல் 1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நிதி பற்றாக்குறையும் பல மடங்கு உயர்ந்து விட்டது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசு அதிகளவில் கடன்களை வாங்கி உள்ளது. அதே நேரத்தில் வருவாய் குறைந்து விட்டதால் நிதி நிலைமை மோசமாகி உள்ளது. 2020-21-ல் மட்டுமே வருவாய் பற்றாக்குறை ரூ.61.320 கோடியாக உள்ளது. கடந்த 5 ஆண்டில் பொது கடன் 3 லட்சம் கோடியாக உள்ளது.

இடைக்கால பட்ஜெட்டின் போது ரூ.4.85 லட்சம் கோடி நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் ரூ.5.24 லட்சம் கோடி நிதி பற்றாக்குறை தற்போது இருக்கிறது.

தலைப்புச்செய்திகள்