Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுக்க புதிய சாப்ட்வேர் அறிமுகம்

ஆகஸ்டு 09, 2021 04:21

திருப்பூர்:- தமிழக டி.ஜி.பி., இயக்குனர் சைலேந்திரபாபு கோவை, திருப்பூர் மாநகரம் மற்றும் கோவை மண்டல போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு கலந்துரையாடினார். அப்போது அவர் சட்ட விரோத செயல்கள், குற்றச்சம்பவம், போக்குவரத்து நெரிசல்களை குறைத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
 
இதில் பங்கேற்ற திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பேசியதாவது:-

திருப்பூர் மாநகரில் 16 கிலோ கஞ்சா, 758 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூதாட்ட வழக்கில் ரூ.2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாகன திருட்டு வழக்கில் பல்வேறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 8 இரு சக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் திருடு போன ரொக்க பணம் ரூ.19.83 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரில் குற்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் இ- பீட் சிஸ்டம் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்