Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாக்டர் வீட்டுக்குள் புகுந்து சைக்கிளை திருடி சென்ற வாலிபர்

ஆகஸ்டு 09, 2021 04:26

திருப்பூர்: திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி., ரோட்டை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. டாக்டரான இவர் வீட்டின் கேட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பி வந்த போது வீட்டின் காம்பவுண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய சைக்கிளை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தபோது அன்று மாலை 5 மணி அளவில் வீட்டின் கேட்டை திறந்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்குள் புகுந்து சைக்கிளை திருடி கொண்டு வெளியே செல்வது பதிவாகி இருந்தது.  

அந்த காட்சிகளை வைத்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டாக்டர் வீட்டுக்குள் புகுந்து சைக்கிளை திருடிச்செல்லும் சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்