Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயில்களை திறக்க வலியுறுத்தி பெண் தற்கொலை முயற்சி

ஆகஸ்டு 10, 2021 11:32

கோயில்களில் பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தி விநாயகர் சிலையுடன் மனு அளிக்க வந்த ‘ஹிந்து மக்கள் புரட்சிப் படை’ அமைப்பினர். படம்: ஜெ.மனோகரன் கோயில்களை திறக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள்குறைதீர்க்கும் முகாமில் மனு அளிப் பதற்காக, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வந்திருந்தனர். அப்போது ஒரு பெண், பாட்டிலில் சாணி பவுடர் கலந்து வைத்திருந்த தண்ணீரை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். காவல்துறையினர், பாட்டிலை பறித்து விசாரித்த போது, அவர் பூமார்க்கெட் அருகேயுள்ள மாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துலட்சுமி(40) என்பதும், கோவையில் மூடப்பட்டுள்ள அனைத்துக் கோயில்களையும் திறக்க வேண்டும், பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அந்த பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

‘ஹிந்து மக்கள் புரட்சிப்படை’ அமைப்பினர், மாநில தலைவர் பீமாபாண்டி தலைமையில், சிவன் வேடம் அணிந்த ஒருவருடன், கையில் விநாயகர் சிலையை எடுத்துக்கொண்டு வந்து மனு அளித்தனர். அதில்,‘‘செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. எனவே, விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், இந்து கோயில்களை திறந்து, பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்