Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூதாட்டியை காரில் அழைத்துச் சென்று ரேஷன் பொருட்கள் பெற்றுத்தந்த எம்எல்ஏ

ஆகஸ்டு 10, 2021 11:33

சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரின் காரை மறித்து, நியாயவிலைக் கடையில் முறையாக பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய மூதாட்டியை, காரில் அழைத்துச் சென்று பொருட்கள் கிடைக்க எம்எல்ஏ ஏற்பாடு செய்தார்.

திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வரும் பணிகளை, தெற்கு தொகுதி சட்டப்பேரவைத் உறுப்பினர் க.செல்வராஜ் நேற்று ஆய்வு செய்ய வந்தார். அப்போது, அவரின் காரை வழிமறித்த மூதாட்டி கன்னியம்மாள் (70), கே.வி.ஆர் நகர் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் முறையாக பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை என்றும், இதுகுறித்து கேட்டால் தரக்குறைவாக கடை ஊழியர்கள் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, மூதாட்டியை தனது காரில் ஏற்றிச் சென்ற சட்டப்பேரவை உறுப்பினர், முறையாக ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும், பொதுமக்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். இதே நிலை நீடித்தால், மேல் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று கடை அலுவலர்கள், விற்பனையாளர்களை எச்சரித்தார். பின்னர், மூதாட்டிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்ததுடன், தனது சொந்த பணத்தை உதவித்தொகையாகவும் அளித்து அனுப்பிவைத்தார்.

தலைப்புச்செய்திகள்