Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலகிலேயே மிக அதிக அளவாக ரூ.5 ஆயிரம் கோடி சேமித்து குஜராத் கிராமம் சாதனை

ஆகஸ்டு 10, 2021 11:42

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள மதாபர் கிராமம் உலகின்பணக்கார கிராமம் ஆகும். உலகிலேயே மிகவும் வசதி படைத்த கிராமமாக இது திகழ்கிறது. இங்கு 17 வங்கிகள் உள்ளன. இங்கு மொத்தம் 7,600 வீடுகள் உள்ளன. இங்குள்ள வங்கிகளில் மக்கள் போட்டுள்ள சேமிப்புத் தொகை ரூ. 5 ஆயிரம் கோடியாகும். தனி நபர் சேமிப்பு ரூ. 15 லட்சமாக உள்ளது.

இந்த கிராமத்தில் பள்ளி, கல்லூரி, ஏரி, அணை, மருத்துவ மையம், கோவில் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இவை அனைத்தையும் தவிர நவீன வசதிகளைக் கொண்ட கோசாலை உள்ளது.

பிற கிராமத்தை விட இந்த கிராமம் இத்தனை வசதி படைத்ததாக இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இங்குள்ளவர்களின் மகன், மகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர். 65 சதவீதம்பேர் வெளிநாடு வாழ் இந்தியர்களாவர். இவர்கள் தங்கள்குடும்பத்தினருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புகின்றனர். மேலும் வெளிநாட்டில் பணம் சம்பாதித்து இக்கிராமத்தில் சொந்தத் தொழிலும் செய்கின்றனர்.

1968-ம் ஆண்டு லண்டனில் மதாபர் கிராம சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் இக்கிராம மக்களைஒருங்கிணைக்கும் சங்கமாக இதுசெயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சங்கம் இக்கிராமத்திலும் தொடங்கப்பட்டு வெளிநாட்டில் வாழும் இக்கிராம மக்களுடன் சுமுக உறவை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் பணி புரிந்தாலும் தங்களது சொந்த கிராமத்தில் உள்ள வங்கிகளில் தாங்கள்சேமிக்கும் பணத்தை டெபாசிட் செய்வதை இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கமாகக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். விவசாயம் இக்கிராமத்தின் பிரதான தொழிலாக உள்ளது. இங்கிருந்து வேளாண் பொருள்கள் மும்பைக்கு அனுப்பப்படு கின்றன.

தலைப்புச்செய்திகள்