Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மிஸ்டு கால் கொடுத்து சமையல் கியாஸ் இணைப்பு பெறலாம்- இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய வசதி

ஆகஸ்டு 10, 2021 12:45

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு புதிய கியாஸ் இணைப்பை பெற மிஸ்டு கால் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் 84549 55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் புதிய எல்பிஜி இணைப்பு கொடுக்கப்படும்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா கூறியதாவது:-

இந்த மிஸ்டு கால் வசதி எல்பிஜியை எளிதாக பெறுவதற்கு முக்கியமான பங்காற்றும். இந்த வசதி மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.

மூத்த குடிமக்களுக்கும், கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இது நன்மை அளிக்கும். வாடிக்கையாளர்கள் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம், இந்தியன் ஆயில் செயலி, http://cx.indianoil.in என்ற வலைதளம், 75888 88882 (வாட்ஸ்-அப்), 77189 55555 (குறுஞ்செய்தி, ஐவிஆர்எஸ்) உள்ளிட்டவைகள் மூலமாக சமையல் கியாஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து கட்டணத்தை அமேசான், பேடிஎம் உள்ளிட்ட பணபரிமாற்ற செயலி மூலமாக செலுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

வாடிக்கையாளர்கள் தங்கள் இல்லத்திலேயே இரட்டை இணைப்பு தரும் வசதியையும் இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் வைத்யா தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஒரு இணைப்பு வைத்துள்ளவர்கள் இரட்டை சமையல் கியாஸ் சிலிண்டராக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் வழக்கமான 14.2 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டருக்கு பதிலாக 5 கிலோ சிலிண்டர் பெறும் வசதியையும் அவர்கள் பெறலாம்.

தலைப்புச்செய்திகள்