Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வளர்ப்பு நாய் அச்சுறுத்தினால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம்: மதுரை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

ஆகஸ்டு 11, 2021 12:17

பொதுமக்களை வளர்ப்பு நாய்கள் அச்சுறுத்தினால், அதன் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

மதுரை மாநகராட்சிப் பகுதியில் இறைச்சிக் கடைகளில் சீர்கேடு காணப்படுகிறது. தெருக்களில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். அனுமதியில்லாத இடங்களில் ஆடு, மாடுகளை வதை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். ஆடு, மாடு, குதிரைகளால் தெருக்களில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டால், அதன் உரிமை யாளர்களுக்கு ரூ.1,200 அபராதம் விதிக்கப்படும்.

தெருக்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் அல்லது பராமரிப்பாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக ஆட்சேபம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள், மாநகராட்சி நகர்நல அலுவலர்களுக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்