Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓட்டுப்பதிவு: மே.வங்கத்தில் தடியடி

ஏப்ரல் 29, 2019 09:48

கொல்கட்டா: இன்று நடந்து வரும் 4 ம் கட்ட லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் பா.ஜ., எம்.பி., கார் நொறுக்கப்பட்டது. அசன்சால் ஓட்டுச்சாவடியில் பா.ஜ., திரிணாமுல் காங்., தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையாளர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். 

9 மாநிலங்களில் உள்ள 72 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இன்று காலை முதல் விறுவிறுப்பான ஓட்டப்பதிவு நடந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பெரிய வன்முறை இல்லாமல் அமைதியாக சென்று வருகிறது. 

இன்று மேற்குவங்கம் ஜம்முவி அசன்சால் பகுதியில் பா.ஜ., எம்பி. பபூல்சுப்ரியோ வந்த கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பா.ஜ., திரிணாமுல் காங்., தொண்டர்கள் மோதிக்கொண்டனர். இங்குள்ள சாவடியில் இருந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் நொறுக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். 

மேற்குவங்கம் சண்டிபூரில் ஒரு சாவடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தலைப்புச்செய்திகள்