Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடந்துள்ளது- எஸ்.பி.வேலுமணி

ஆகஸ்டு 11, 2021 04:13

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அலுவலகம் உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடந்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்