Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியுடன் சுகாதார மந்திரி சந்திப்பு

ஆகஸ்டு 13, 2021 11:08

புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரே தடுப்பூசி கோவேக்சின் ஆகும். பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசியை பல நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை.  தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கான அங்கீகாரம் பெறுவதற்காக அனைத்து ஆவணங்களும் உலக சுகாதார அமைப்பிடம் வழங்கியிருப்பதாகவும், இது தொடர்பான விசாரணையையும் அந்த அமைப்பு நடத்தியதாகவும் மத்திய அரசு கடந்த மாதம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதனை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா சந்தித்துப் பேசினார். அப்போது, கோவேக்சினுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பான விவகாரங்களை இருவரும் விவாதித்தனர்.

இதுதொடர்பாக, மாண்டவியா தனது டுவிட்டர் தளத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியுடன் ஒரு சந்திப்பு நடந்தது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெறுவது தொடர்பாக நாங்கள் விரிவான ஆலோசனை நடத்தினோம். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை இந்த சந்திப்பின்போது சவுமியா சுவாமிநாதன் பாராட்டினார் என பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்