Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

ஆகஸ்டு 13, 2021 06:13

காரைக்கால்: அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்கிலும், ஆக.15-ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரியை ஆக்கும் வகையிலும் காரைக்கால் மாவட்டத்தில் அவ்வப்போது தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்டத்தில் உள்ள 11 ஆரம்ப சுகாதரா நிலையங்கள், திருநள்ளாறு சமுதாய நல வழி மையம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி ஆகிய 14 இடங்களில் 2 நாட்கள் நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.

இம்முகாமில் 18 முதல் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. தகுதியுடையோருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது மேலும் ஒவ்வொரு இடத்திலும், நடமாடும் வாகனங்கள் மூலம், மக்கள் அதிகமாக தடுப்பூசி போடாத பகுதிகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காரைக்கால் வண்டிக்காரத் தெருவில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை, மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கு பணியிலிருந்த செவிலியர்களிடம், வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

தலைப்புச்செய்திகள்