Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

ஆகஸ்டு 14, 2021 11:11

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனால் சட்டசபையில் நேற்று 2021-2022-ம் ஆண்டுக்கான திருத்த நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறை பட்ஜெட்டில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டிருந்தது. அதாவது, காகிதமில்லா சட்டசபை என்பதை நடைமுறைப் படுத்தும் வகையில், உறுப்பினர்களுக்கு புத்தகமாக பட்ஜெட் பிரதியை வழங்காமல், கம்ப்யூட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பொது பட்ஜெட்டைப் போலவே  வேளாண்மைத் துறை பட்ஜெட்டிலும் பல முக்கிய தகவல்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக வேளாண்மைத் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்