Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய அரசியலில் தலையிடுகிறது: ‘டுவிட்டர்’ மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ஆகஸ்டு 14, 2021 11:14

புதுடெல்லி: டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். அவர்களின் புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டார். இதுதொடர்பான புகாரில், அவரது ‘டுவிட்டர்’ கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியது. காங்கிரசின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கையும், நூற்றுக்கணக்கான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களின் கணக்கையும் முடக்கியது.

இந்தநிலையில், ‘டுவிட்டர்’ நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து, ராகுல் காந்தி நேற்று தனது வீடியோ பேச்சை வெளியிட்டார். அதில், எனது டுவிட்டர் கணக்கை முடக்கியதன் மூலம், இந்திய அரசியல் நடவடிக்கையில் ‘டுவிட்டர்’ நிறுவனம் தலையிடுகிறது. இந்திய அரசியலை தீர்மானிக்கும் பணியை ஒரு கம்பெனி செய்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதி என்ற முறையில் இதை நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்