Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிராமசபை கூட்டத்துக்கு அனுமதி அளிக்காதது ஏன்?- அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்

ஆகஸ்டு 14, 2021 11:52

சென்னை: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கும் நோக்கில், மக்கள் நலன் கருதியே கிராமசபைக் கூட்டத்துக்கு அனுமதிஅளிக்கவில்லை என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்கீழ் உரிய நெறிமுறைகளை பின்பற்றி கிராமசபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய 4 நாட்களில் நடத்தப்பட வேண்டும். இந்த விதிகளின்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடத்த உரிய அனுமதி வழங்கும்படி ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டார்.

கரோனா பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில்ஊரடங்கு நீட்டிப்பு செய்து வெளியிடப்பட்ட அரசாணையில், கூட்டநெரிசலை தவிர்க்கும்படியும், விதிகளைப் பின்பற்றி பொதுமக்கள்கூட்டம் கூடினால் தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புறப் பகுதிகளில் தற்போது கரோனா பெருந்தொற்றுஅரசின் தீவிர நடவடிக்கைக்குப்பின்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கரோனா பரவலை கட்டுப்படுத்தவும், பெருந்தொற்றுப் பரவலை மேலும் பரவாமல் தடுக்கவும், அரசால் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கும் நோக்கில் பொதுமக்கள் நலன் கருதியே கிராமசபைக் கூட்டத்தைக் கூட்ட அரசுஅனுமதி அளிக்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்