Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிக்குள் இரு சிறிய பானை கண்டெடுப்பு

ஆகஸ்டு 14, 2021 11:53

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை கீழடி, கொந்தகை, அகரத்தில் மண் பானை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, நெசவுத் தொழிலில் பயன்படும் தக்கிளி, கற்கோடரி, சிறிய செப்பு மோதிரம் உள்ளிட்ட 900-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது கொந்தகையில் ஒரு முதுமக்கள் தாழியில் இறுதிச் சடங்குக்கு பயன்படுத்திய கூம்பு வடிவ பானை, சாதாரண பானை என 2 பானைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த முதுமக்கள் தாழியின் அடியில் மனிதஎலும்புகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதுவரை கொந்தகையில் 25 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு 13 தாழிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்